அண்ணா விளையாட்டு அரங்கம் - திருச்சிராப்பள்ளி
அண்ணா விளையாட்டு அரங்கம் (Anna Stadium) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு அரங்கமாகும். 1970 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வரங்கம் 31.25 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த வளாகம் ஒரு பல்நோக்கு உள்ளரங்க வளாகமாக செயல்படுகிறது. டென்னிஸ்டென்னிசு, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு இங்கு தனி அரங்கங்கள் உள்ளன. செயற்கை புல்தைரையால் உருவாக்கப்பட்ட ஒரு வளைகோல் பந்தாட்ட மைதான வசதியும், தடகள விளையாட்டுக்கான 400 மீட்டர் ஓடுகளப் பாதை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் மற்றும் ஒரு விளையாட்டு விடுதி போன்ற வசதிகளும் இங்குள்ளன. திருச்சியின் துணை நகரமான காச்சாமலை பகுதியில் அண்ணா விளையாட்டரங்கம் அமைந்துள்ளது. இவ்வளாகத்திலுள்ள் பிரதானமான கால்பந்து அரங்கம் மற்றும் தடகள அரங்கத்தில் 20000 பேர் அமர்ந்து பார்க்க முடியும்.



